தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வரும் 19ஆம் தேதி ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 20ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.