தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது. இந்நிலையில் மிக விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.