Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் வருகிற 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (பிப்ரவரி 21) தென் தமிழக மாவட்டங்கள், பிப்ரவரி 22ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை,  குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |