இன்று (மார்ச்.27) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை (மார்ச்.28) டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.