Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக் கடலில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் 16 முதல் 18ஆம் தேதிவரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு அதிக கன மழை பெய்துள்ளது. மேலும் நீடாமங்கலத்தில் 16, திருமானூரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

Categories

Tech |