Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் 2,356 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,868 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். செங்கல்பட்டு 121, தஞ்சையில் 62, நெல்லையில் 23, கோவையில் 21 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் இரவு நேர ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் இந்த பகுதிகளில் ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |