Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் “மாலத்தீவில் இருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (13/02/2022) தென் தமிழக மாவட்டங்கள்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையடுத்து கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதன்பின் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து நாளை (14/02/2022) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதன்பின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். இதையடுத்து 15- 17ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 8 செ.மீ., திருக்குவளை, கோடியக்கரை பகுதிகளில் 6 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. இன்று (13/02/2022) தென் தமிழக கடலோரம் பகுதி, குமரி கடல் பகுதி, மாலத்தீவு, தென் கேரள கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |