Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |