Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

அதன் எதிரொலியாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மற்றும் நெல்லை, வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் லட்சத்தீவு, குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரளா, தமிழக கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |