தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் மந்தைவெளி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.