Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… ஜனவரி 5 முதல்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 5 ஆம் தேதி முதல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |