தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமன்றி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதி வேகமாக பரவி வருவதாகவும், பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் படுக்கை வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.