Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Categories

Tech |