தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அதை பற்றி கூறும்போது, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தானியங்கி படிக்கட்டுகள் அமைப்பதற்கு அதிக செலவாகும்.
எனவே 10% பேருந்துகளில் மட்டும் தானியங்கி வசதி ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வந்ததும் டெண்டர்க்கு விடப்பட்டு மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.