Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5000 பணியிடங்கள்… தமிழக அரசு செம செய்தி….!!!

தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் உள்ளன. அந்த காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற முடிகிறது.

இந்நிலையில் தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிதாக கேங்மேன்கள்நியமிக்கப்பட்டாலும் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |