Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி….. வெளியான அறிவிப்பு..!!!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 5.110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 5,110 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |