Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 55 இடங்களில்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்… சுகாதாரத்துறை அமைச்சர்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் என்னும் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து 155 இடங்களில் 24மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் செயல்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 2.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவாக 4.88 லட்சம் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |