Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள் பறிமுதல்…. என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை…..!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது கேரள மாநிலம் விழிநம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட 25 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ், இரண்டு லேப்டாப் மற்றும் எட்டு வைபை மோடம்கள் இலங்கைக்கான பாஸ்போர்ட் உள்ளிட்டவை பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |