தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் எனவும் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி& காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யும். நாகை, காரைக்கால், என்னூர், பாம்பன் துறைமுகங்களில் 1 ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் அவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.