பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 3-வது பருவ கணினி பாடத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் என்ற தலைப்பில் பாடம் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கும் செயலாகும். இதனை நீக்க வேண்டும் என நாங்கள் கடந்த ஆண்டு கூறினோம். ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் குழுக்கள் என்ற தலைப்பில் கணினி பாடம் முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டில் வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக்கொண்டதாகும்.
ஆனால் எந்த என்னுடன் எந்த எண்ணை கூட்டுவது எந்த எண்ணெய் கழிப்பது என்பது சீட்டு கட்டுகள் மூலமாக அந்த பாடம் கற்றுத் தருவது தான் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் சீட்டு கட்டுகள் பாடத்தை அச்சிட்டு அதை இரு மாணவர்கள் விளையாடுவதை போலவும், இடையில் ஆசிரியர் தலையிட்டு எவ்வாறு விளையாடுவது என்பதை கற்றுக் கொடுப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதற்காக சீட்டு கட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை எந்த சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை பார்க்கும் போது சூதாட்டம் தான் நினைவுக்கு வரும். மேலும் மாணவர்கள் பருவத்தில் படிக்கும் விஷயங்களும் , பழகும் விஷயங்களும் எளிதில் மனதை விட்டு விலகாது. இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்போது நமது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இதன் மூலம் பணத்தை இழந்ததால் கடந்த சில ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.இந்நிலையில் பாமக வலியுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிரூபிக்கப்பட்ட சட்டத்திற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாடு மாநில பாடப் புத்தகத்தில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் குழுக்கள் பாடம் கற்பிக்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு கணினி பாடத்தில் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான படம் இருப்பது எனது கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நாள் வலியுறுத்தினேன். ஆனால் நடப்பு கல்வியாண்டிலும் அந்த பாடம் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மூன்றாம் பருவம் வரும் ஜனவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதற்கு முன்பு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் குழுக்கள் பாடத்தை பாடத்திலிருந்து நீக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மனதில் சூதாட்டம் குறித்த சிந்தனை எழுவதை தடுக்க முடியும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.