Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 கணவன்களை ஏமாற்றி….. 7 ஆவதுக்கு ரெடி…. வசமாக சிக்கிய 20….!!!!

மதுரையைச் சேர்ந்தவர் சந்தியா. 26 வயதான இவர் ஆறு பேரை திருமணம் செய்து தற்போது ஏழாவதாக திருமணம் செய்ய தயாரான நிலையில் இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தியா என்ற பெண் தனபால் என்ற இளைஞரை ஆறாவதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஐந்து பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களிலேயே வேறொரு பகுதியில் வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ய தன்னுடைய போலியான குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது ஆறாவதாக திருமணம் செய்த தனபால் குடும்பத்தினர் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |