தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பின்னர் ஆம்னி பேருந்து போக்குவரதுத்து இன்று மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கின. எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்திற்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்க கோரிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்து போக்குவரத்தை தொடங்க போவதில்லை என்றும் அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. அன்பழகன் வைத்திருந்தார். அதன்படி மத்திய மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.