Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |