Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகின்ற 15ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |