தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.