Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |