தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.