Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டியில் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். அதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன் ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சார்பாக பிறந்த குழந்தை முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை உயரம் மற்றும் எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் 37 லட்சம் குழந்தைகளை பரிசோதனை செய்ததில் 2 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடனும், 7 லட்சம் பேர் விதமான பாதிப்புகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட 10.26லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு கீரை,சுண்டல் மற்றும் சத்தான அரிசி உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |