தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம் ( No Bag Day ) கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
எனவே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் 26.02.2022 அன்று நடைபெற இருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.