Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்ட நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் 10, 11, 12 வகுப்பு படிக்கும் மாணவ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக 12ஆம் தேதி பொது தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி முடியும் எனவும் அதற்கு முன்னரே பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறியுள்ளார். அதுபோல பத்தாம் வகுப்பு தேர்வுகள் மே 10 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 23ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு ஜூன் 7ம் தேதியும் பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 17ஆம் தேதியும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது தவிர ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக இறுதி ஆண்டு தேர்வுகள் மே 5-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |