தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு கேள்வித்தாள்களை மண்டல அளவில் உள்ள பள்ளியில் இருந்து பெற்று செல்ல வேண்டும். அதற்கு பொறுப்பான ஒரு ஆசிரியர் நியமனம் செய்து கேள்வித்தாள்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வை எந்தவித புகார் இருக்கும் இடமில்லாமல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.