தமிழகம் முழுவதும் அரசு நாள்தோறும் மாணவர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு சிறந்த திட்டத்தை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.
அதாவது அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் 6,177 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக ரூபாய் 3,08,85,000-த்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.