தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை துவக்க முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவு பிறப்பித்துள்ளார். 50% தமிழ்வழிக்கல்வி என்பதற்கு குறையாமல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்துள்ளார்.