Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு… இன்றைய நிலவரம்..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 7000 நெருங்குகிறது. இன்றைய நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது. இதில் 46 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Categories

Tech |