தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதாசாஹூ கடலூர் மாவட்டத்தில் புதிதாக 80 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அவர் தெரிவித்தார்.