தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த முதல்வர் முக. ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தொல்லியல் அகழாய்வு, சங்க காலம் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணவும், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அகழாய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. தன்பெருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புல ஆய்வு நடத்தப்படும்.
7 இடங்களில் அகழாய்வுகள்:
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெறும்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதற்கட்ட அகழாய்வு நடைபெறும்.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் முதற்கட்ட அகழாய்வு நடைபெறும்.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதற்கட்ட அகழாய்வு நடைபெறும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.