Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்படாத ஏழு கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் 2014 முதல் 2019 ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடாத 86 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காயுதே மில்லக் கழகம்,தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |