தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..
அதேபோல இன்று நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வரும் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை கனமழையும் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.