தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெரம்பலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.