Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு வங்கக்கடலின் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்பதால் நாளை ஓரிரு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |