Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது m

Categories

Tech |