தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அடுத்த ஐந்து வருடங்களில் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்த்த இலக்கு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே 303 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.