Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் ஏராளமான மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.

அதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த உதவி தொகையானது 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழகம் முழுவதும் ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது. மேலும் தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் வருகின்ற மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்யலாம்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 12.01.2022 முதல் 27.01.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 தேர்வு கட்டண தொகையுடன் சேர்த்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022 என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |