தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.