தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் நாளை (மார்ச்.6) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை பெருநகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்ககடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.