அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மே 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories