வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.