தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கு மத்தியில் கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை குளிரூட்டும் விதமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயிலுக்கு குளிரூட்டும் விதமாக மழை பெய்து கொண்டிருப்பதால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.