தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.