தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது.
தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது. குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாக காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. எனவே நிலைமை சீரடையும் வரை 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.